சிக்கபானவரா பகுதியில் உள்ள தனது வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க அபினந்தன் என்ற தனியார் நிறுவன ஊழியரும், அவரது நான்கு வயது மகனும் திங்கள்கிழமை காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய நிலையில், திங்கள்கிழமை காலை கணவனும் மகனும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரது மனைவி அவசர உதவி எண் 112-க்கு அழைத்து அளித்த தகவலின் பேரில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டனர். உடல்களில் கத்திக் குத்துகளோ அல்லது பெரிய அளவிலான காயங்களோ இல்லை என்றும், சிறிய அளவிலான காயத் தழும்புகள் மட்டுமே காணப்படுவதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்களின் இறப்பிற்கான சரியான காரணமும், இது கொலையா என்பதும் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் துயரமான சம்பவத்தில் அவரது மனைவிக்கு அல்லது வேறு நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், மரணத்திற்கு வழிவகுத்த சூழல்கள் குறித்தும் அறிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…
மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…