பயிர் காப்பீட்டுத் தொகை… விவசாயிகளுக்கு அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்… உடனே செக் பண்ணுங்க…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

பி எம் ஃபசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சுமார் 3200 கோடி தொகையை விடுவிக்கின்றார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு 1,156 கோடியும், ராஜஸ்தானுக்கு 1,121 கோடியும், சத்தீஸ்கருக்கு சுமார் 150 கோடியும், இதர மாநிலங்களுக்கு 773 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர் காப்பீட்டு தொகை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.