“இனிமே நிலம் உனக்கு இல்ல”…. கண்மூடித்தனமாக வெட்டிக் கொல்லப்பட்ட விவசாயி… ரத்தம் சொட்டும் கத்தியுடன் காவல் நிலையம் சென்ற நபர்… நிலத்தகராறில் கொடூரம்….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில், நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கதிர்வேல் என்ற விவசாயி கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி ஆகியோரது நிலங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இருவரின் நிலங்களுக்கும் இடையே நிலத்தை அளவிடுவது தொடர்பாகப் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இவர்களுக்கிடையே தகராறும் முன்விரோதமும் தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் இருவரும் தங்களது நிலங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

   

வாக்குவாதம் முற்றிய ஆத்திரத்தில், பொன்னுசாமி தான் விவசாயப் பணிக்குப் பயன்படுத்திய கத்தியால் கதிர்வேலின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் கிராமத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

   

கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, ரத்தம் சொட்டும் கத்தியுடன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்ற பொன்னுசாமி தானாக முன்வந்து சரணடைந்தார். இதனையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் கதிர்வேலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.