பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலா ஆகியோருக்கு இடையே உருவான குடும்ப விவாதம் நாளுக்கு நாள் சூடாகி வரும் நிலையில், ஸ்ருதி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலாவுடன் மகன் ராகாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை மாதம்பட்டி ரங்கராஜ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகின. அதேநாளில் முதல் மனைவி ஸ்ருதியும் கணவருடன் இருக்கும் படங்களைப் பதிவிட்டதால், “பணம் இருந்தால் இரண்டு திருமணங்கள் செய்யலாமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி விவாதிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ஸ்ருதி ரங்கராஜ் முன்னர் அளித்த பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “கணவர் மீது மனைவிகளுக்கு எவ்வளவு அன்பு இருக்குமோ அந்த அளவுக்கு எனக்கு மாதம்பட்டி ரங்கராஜை பிடிக்கும். என்னை சுதந்திரமாக வளர வைத்தார்; சுயசார்புடன் இருப்பதற்கு அவரே எனக்குப் பெரிய உறுதுணை” என உருக்கமாகப் பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “உங்கள் மீது இவ்வளவு மரியாதையும் அன்பும் வைத்திருந்த மனைவியை ஏமாற்ற எப்படி மனம் வந்தது?” என மாதம்பட்டி ரங்கராஜைக் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
