மலேசியாவில் இன்று நடைபெறும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் உற்சாக மிகுதியால் “TVK… TVK…” என முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் சுமார் 90,000 ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒட்டுமொத்த கூட்டமும் “TVK… TVK…” எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி முழக்கமிட்டதால் அரங்கம் அதிர்ந்தது.
Whole crowd ” TVK.. TVK….TVK…”
Anna : Smile & Inga Vendam,..Inga Vendam.. Signal to Stop😄❤️🔥#ThalapathyThiruvizha#JanaNayaganAudioLanuch pic.twitter.com/H8qpvxTemw
— I ᴅ ʀ ɨ ꜱ ʜ 🦁シ︎ (@IdrishVijay) December 27, 2025
மலேசிய காவல்துறையின் (PDRM) கடுமையான அரசியல் கட்டுப்பாடுகள் மற்றும் தடையை அறிந்திருந்த நடிகர் விஜய், மேடையிலிருந்து கைகளை அசைத்து “இங்கு வேண்டாம், வேண்டாம்” என்பது போல அமைதியாக இருக்குமாறு ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.இந்த விழாவில் அரசியல் பேசவோ, கட்சியின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது என மலேசிய காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும், நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறவும் விஜய் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முயன்றார்.
