தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.
முதலில் சூர்யா நடிக்க, சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதே போல சூர்யாவுக்கும் நடிப்பில் ஆர்வம் இல்லையாம். கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம். ஆனால் வசந்த இருவரையும் சமாதானப்படுத்தி சூர்யாவை நடிக்கவைத்துள்ளார்.
முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய், அஜித்தை முந்தி ரஜினிக்குப் பிறகு மார்க்கெட் கொண்ட நடிகர் சூர்யாதான் என்று சொல்லுமளவுக்கு உயர்ந்தார்.

#image_title
அவரை அப்படி ஒரு இடத்துக்குக் கொண்டு சேர்த்த படங்களில் ஒன்று கேவி ஆனந்த் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த ‘அயன்’ திரைப்படம். ரஜினிக்கு பாட்ஷா, விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு பில்லா என்றால் சூர்யாவுக்கு ‘அயன்’ என்று சொல்லுமளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த படம் பாடல்கள், சண்டைக் காட்சி, திரைக்கதை, நகைச்சுவை, நட்பு, துரோகம் என எல்லாம் கலந்துகட்ட பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. குறிப்பாக அந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை திகைக்க வைக்குமளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தன.
தமிழ் சினிமா வரலாற்றில் பாடல் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்பதுதான் வாடிக்கை. ஆனால் முதல் முறையாக சண்டைக் காட்சிக்கு ஒன்ஸ்மோர் கேட்டது அயன் படத்துக்குதான். அந்த படத்தில் இடம்பெற்ற ஆப்பிரிக்காவில் நடக்கும் சேசிங் சண்டைக் காட்சிக்கு பல தியேட்டர்களில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ரகளை செய்தனர். அந்த அளவுக்கு விறுவிறுப்பாக அந்த ஸ்டண்ட் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவில் வந்த சண்டைக் காட்சி என்றால் அது அயன் படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சிதான்.
