பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. தமிழில் லெஜெண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தனது 32-வது பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியுள்ளார். இந்தப் பிறந்தநாள் விழாவில் அவர் வெட்டிய 7 அடுக்குகள் கொண்ட கேக், தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தக் கேக்கின் சிறப்பம்சமே அதில் பதிக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் தான். சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வைரக் கேக்கை வெட்டி ஊர்வசி தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ஒரு கேக்கிற்கு இவ்வளவு கோடி செலவா என ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
“>
மேலும் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் பகுதியில் நடைபெற்ற 251 ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் தேவையான முழு நிதி உதவியையும் வழங்கியுள்ளார். இந்த உன்னதமான காரியத்தின் மூலம் அவர் பலரது மனங்களை வென்றுள்ளார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள அந்தப் பெண்களுக்குத் தனது பிறந்தநாள் பரிசாகத் திருமணச் செலவுகளை ஏற்றுக்கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நேரில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும், திருமணத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ஊர்வசியின் இந்தச் செயலை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். “நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு தேவதை” எனப் பலரும் சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்திப் பதிவிட்டு வருகின்றனர்.
