மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வழிபாடு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடிகை குஷ்பூ சமந்தா நயன்தாரா நிதி அகர்வால் ஆகியோருக்கு கோயில் உள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அவரின் தீவிர ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருக்கிறார் சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்துக்கு சிலை வைத்து அதற்கு தினமும் வழிபாடு செய்து வருகிறார்.

மதுரையில் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார் இவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணி 250 கிலோ கருங்கல்லை வைத்து சிலை ஒன்றை செய்து இருக்கிறார் அந்த சிலைக்கு கீழ் தனது தாய் தந்தையர் புகைப்படத்தையும் விநாயகர் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார் தினந்தோறும் ரஜினி சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகிறார் ரசிகர் என்பது எல்லாம் தாண்டி தீவிர பக்தராக மாறி இருக்கிறார் கார்த்திக்.

மேலும் தனது நீண்ட நாள் கனவு தற்போது தான் நிறைவேறி இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் ஏற்கனவே உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் கோயில் வழிபாடு இருக்கின்றது. ஏகப்பட்ட சாமிகள் கோவில்கள் உள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் திரை பிரபலங்களுக்கும் கோவில் கட்டி வருகிறார்கள் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

