Connect with us

47 வயதில் இரண்டாவது திருமணமா..? பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை.. இணையத்தில் வைரலாகும் தகவல்…

CINEMA

47 வயதில் இரண்டாவது திருமணமா..? பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை.. இணையத்தில் வைரலாகும் தகவல்…

 

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல நடிகைகள் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரகதி. இவர் தனது வயதுக்கு கிடைத்த பட வாய்ப்பை  பயன்படுத்தி சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும், தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி உள்ளார்.

   

வெள்ளித்திரையில் 1994 இல் வெளியான ‘வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இவர் வெள்ளித் துறையில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு சரியான பாட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றார். இவர் தற்பொழுதும் தொடர்ந்து  பல சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.அதனால் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தினமும் செய்து கொண்டிருக்கிறார்.அதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் போது எடுக்கப்படும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர், இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்பொழுது அவரின் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இவரிடம் சில பேட்டிகளில் இரண்டாவது திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அதில் துளியும் ஆர்வம் இல்லை’ என்று கூறியிருந்தார்.

தற்பொழுது இவரின் இரண்டாவது திருமணம் குறித்து தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது  டோலிவுட் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரகதியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, திருமண ஆசையை கூறியுள்ளார். ஆரம்பத்தில் அதிகம் யோசித்த நடிகை பிரகதி, பின்னர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால்  இது குறித்து சீரியல் நடிகை பிரகதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

Continue Reading
To Top