சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை ஆன ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்த அழுத்தம் மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலின் படி, சின்னத்திரை நடிகையான ராஜேஸ்வரி (39) பாரி முனையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
குடும்பத்தில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் எட்டாம் தேதி தாய் வீடு உள்ள சைதாப்பேட்டைக்கு திரும்பியுள்ளார். அங்கிருந்தபோது மன உளைச்சல் காரணமாக அவர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
