தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன் பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் உடனே முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார். அதன் பின்னர் சிம்புவை பிரிந்த அவர் பிரபுதேவாவைக் காதலித்து அவரோடு ஒன்றாக வாழ்ந்தார். அப்போது பிரபுதேவாவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனாலும் அது தெரிந்தும் நயன்தாரா அவரைக் காதலித்தார். பிரபுதேவா, நயன்தாராவைத் திருமணம் செய்த்கொள்வதற்காக தன் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

இது சம்மந்தமாக அப்போது நயன்தாரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர் பிரபுதேவாவுடனான காதலும் பிரிந்துஇதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொண்டு தற்போது நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நயன்தாரா டாகுமெண்டரி வெளியானபோது விக்னேஷ் சிவன்-நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்னை ஏற்பாட்டு அதுவும் நீதிமன்றம் வரை சென்றது. பின்பு வலைப்பேச்சு டீமை 3 குரங்குகள் என்று கூறி நயன்தாரா சர்ச்சையை கிளப்பினார்.

அடுத்ததாக புதுச்சேரியில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் கேட்கவில்லை என்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் வீடியோ வெளியிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்படி ஒவ்வொரு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் நயன்தாரா குறித்து சுசித்ரா பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார்ன்னு யாருமே நினைக்கல.

உலகத்திகேயே அவரை அப்படி நினைக்கிற ஒரே ஆளு விக்னேஷ் சிவன் தான். நயன்தாரா ஒரு லேடி ஹிட்லர்ன்னு தான் சொல்வேன். அவங்களுக்கு தனுஷை விட ஜாஸ்தி அகங்காரம் திமிரு இருக்குன்னு தான் சொல்வேன். அந்த டாக்குமெண்டரி விஷயத்துல பாத்தே அவங்க எப்படினு தெரிஞ்சிகிட்டேன். அந்த 10 நிமிஷ பன்னாடாடையால எந்த valueமே இல்ல. அதுக்கு அந்த விஷயம் இல்லாமலே இருந்திருக்கலாம். நாசமா போகட்டும் அந்த பத்து கோடி. நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நண்பர்களே கிடையாது. இப்படி திமிரா இருக்குறவங்க கூட யாரு பிரண்ட்-ஆ இருப்பாங்க. அவங்க 3 குரங்குன்னு சொல்றாங்க. அவங்க தான் சொகுசு பூனையா இருக்காங்க என்று கிழித்தெடுத்துள்ளார்.
