முடிவுக்கு வருகிறதா இந்த விஜய் டிவி சீரியல்…? சீரியல் நடிகையே வெளியிட்ட பதிவு… ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on கார்த்திகை 21, 2023

Spread the love

சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில்  விஜய் டிவி. சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’.  இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு  என தனக்கான ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் திரவியமும், காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பார்த்திபன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,பிரியா கதாபாத்திரத்திலும் சுவாதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும்  முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இதில்  பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

   

 

தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் யாருக்கும் தான் காதலித்தவர்களோடு திருமணம் நடைபெறவில்லை. இப்படியிருக்க இந்த சீரியல் தற்பொழுது முடிவடைய போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதாவது இந்த சீரியலில் பிரியாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்வாதி. இவர்  தனது  இன்ஸ்டாக்ராம் பக்கத்தில்  ‘சில விஷயங்கள் முடிகிறதா?’என பதிவிட்டு இருக்கிறார். அவர் சீரியலை தான் சொல்கிறாரா? இல்லை வேறு எதையாவது குறிப்பிடுகிறாரா? என தெரியாமல் ரசிகர்கள் தற்பொழுது குழப்பத்தில் உள்ளனர். இதோ அவரின் பதிவு…