43 வயதில் பிரபல Astronaut-ஐ இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விக்ரம் பட நடிகை… வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்…

By Begam on மாசி 28, 2024

Spread the love

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை லினா. இவர் தமிழில் அனேகன், திரௌபதி, கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  2004ம் ஆண்டு அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

#image_title

#image_title#image_title

   
   

6ம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த பள்ளி மாணவன் விரும்பி , அவரையே திருமணம் செய்த கொண்ட இவர், நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்து செய்தி கிடைத்ததும், ‘இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டு அதனை கொண்டாடினோம்’ என தனது விவாகரத்து பற்றி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

 

இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் தனித்து வாழ்ந்த இவர், மார்ச் 17 ஆம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகை லீனா Gaganyaan astronaut பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை தற்பொழுது இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும், திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவு…