மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பகத் பாசில். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் தந்தை பாசில் ஒரு மலையாளத் திரைப்பட இயக்குனர், தாய் ரோசினா. இவர் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளி மற்றும் திருப்புனித்துரில் உள்ள சாய்ஸ் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

அதன் பிறகு அலாப்புழாவில் உள்ள சனதான தர்ம கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘கையெத்தும் தூரத்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விக்ரமன், சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மலையாள திரைப்பட நடிகை நஸ்ரியா என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

2014 ஆம் ஆண்டு வெளியான பெங்களூர் நாட்கள் என்ற மலையாள திரைப்படத்தின் கணவர் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து நடித்த நடித்துள்ளனர்.தற்போது இவரின் குடும்ப புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

