ராஜ்மோகனின் மேடை பேச்சை கேட்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் திரைப்படங்களின் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இணையதள நிகழ்ச்சிகளை ராஜ் மோகன் தொகுத்து வழங்கியுள்ளார். ராஜ்மோகன் பாபா பிளாக் ஷீப் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

#image_title
இந்த நிலையில் ராஜ்மோகனின் தந்தை உயிரிழந்து விட்டார். இதனால் ராஜ்மோகன் தனது தந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு என் அப்பா ஆறுமுகம் இன்று காலை இயற்கை எய்தி விட்டார். எங்கள் கிராமத்தின் முதல் பிஏ பட்டதாரி. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி. என்னை பேச்சாளராய் உருவாக்கிய அன்பு தெய்வம்.
என் ஆட்காட்டி விரலைப் படித்து மேடை மேடையாக அழைத்துச் சென்றவர். என்னை விட்டு பிரிந்து விட்டார். இறைவனின் நிழலில் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். இறுதி அஞ்சலி செவ்வாய்க் காலை எங்கள் விருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் ராஜ் மோகன் தந்தை இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram