பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் மரணமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வதந்தி பரவி வந்தது. இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது மரணம் குறித்த செய்தி உண்மை இல்லை என்றும், அவரை வெறுக்கும் ஒரு சிலர் தான் இதுபோன்று வதந்திகளை அடிக்கடி பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் இந்த சூப்பர் ஸ்டார் மீது ஏன் இந்த வன்மம்? என ரசிகர்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
