கல்யாணம் பண்றேன்னு நம்ப வச்சு ஏமாத்திட்டான்… பிரபல நாட்டுப்புறக் கலைஞர் தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சி… பகீர் கிளப்பும் பின்னணி…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

மக்கள் கலைஞர் மாதூரி ரத்தோடு, தம்முடைய இல்லத்தில் ஃபேன் சுருக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஞாயிற்றுக்கிழமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடனக் கலைஞர் ஈஸ்வர் சாய், தம்மை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக மாதூரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ஈஸ்வர் சாய் மீது எந்தவித நடடிவக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

காதல் ஏமாற்றம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை இன்மையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாதூரி, இந்த தீவிர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.