Connect with us

படத்தில் சின்ன காட்சியில் நடித்த தற்போது பிரபலமான இயக்குனர்கள்.. ஜூனியர் காமெடியனாக கலக்கிய ஷங்கர்..

CINEMA

படத்தில் சின்ன காட்சியில் நடித்த தற்போது பிரபலமான இயக்குனர்கள்.. ஜூனியர் காமெடியனாக கலக்கிய ஷங்கர்..

 

சினிமாக்களில் பிரபலமான இயக்குனர்கள் தங்கள் படங்களில் சின்ன ரோலில் சிறப்பு வேடத்தில் நடிப்பது ஒரு வழக்கமான ஒன்றாகும், அப்படி தமிழ் சினிமாவில் அவரவர் படங்களில் சிறப்பு வேடத்திலோ அல்லது காமெடி காட்சிகள் அல்லது கருத்து சொல்வது போல் ஒரு ஷாட்டில் ஆவது மூத்த இயக்குனர்கள் வந்து நடித்து மிகவும் அது பிரபலமாகி இருந்திருக்கிறது. அப்படி தற்போது நடித்த இயக்குனர்கள் பேரரசு, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், ஆர்.ரவிக்குமார், ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பல பிரபல இயக்குனர்கள் அவரவர் படங்களிலோ அல்லது வேறொரு படங்களிலோ சின்ன கதாபாத்திரத்திலோ, சின்ன இடத்திலோ வந்து நடிப்பது உண்டு.

சமீபத்தில் மிகப் பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் தன் படத்தில், தன் நண்பர்கள் படத்திலும் சின்னதாக ஒரு கேமியோ செய்து வருகிறார். தற்போது மிகப்பிரம்மாண்டமான இயக்குனர்கள் ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் கேமியோ செய்ததை தற்போது பார்க்கலாம்.

   


1990 இல் S.J சந்திரசேகர் அவர்கள் இயக்கத்தில் உருவான படம் தான் “சீதா”, இப்படத்தில் வரும் வில்லனுக்கு கூட இருக்கும் ஒரு கையாலாக நடித்திருப்பார் பிரம்மாண்ட இயக்குனர் “சங்கர்”

1997இல் வெளியான படம் தான் “மின்சார கனவு”, இப்படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் அரவிந்த்சாமி வருவதற்கு முன் ஒரு முக்கியமான டயலாக்கை காதலுக்காகவே படம் இயக்க பிறந்த “கௌதம் வாசுதேவ் மேனன்” நடித்திருப்பார்.


“எதிர்ப்புறம்” படத்தில் கவுண்டமணி செந்தில் அவர்கள் காம்போவில் வரும் ஒரு காமெடி காட்சியில் பிரபல ஊறுகார இயக்குனர் “பேரரசு” அவர்கள் சின்ன கதாபாத்திரத்தில் டாக்டராக காமெடி காட்சியில் நடித்து இருப்பார், இவர் வழக்கமாக அவர் படத்தில் நடிப்பது உண்டு. ஆனால் முந்தைய காலகட்டத்தில் பல படங்களில் நடித்தும் கொடுத்திருக்கிறார்.


1997 ஆம் ஆண்டு வெளியான “பூச்சுடவா” படத்தில் ஒரு சின்ன காட்சியில் மணிவண்ணன் அவர்கள் பேசும்பொழுது காமெடியனாக வந்து பேசி இருப்பார் ஏ.ஆர் முருகதாஸ்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top