திருமண பந்தத்தில் இணையும் பிரபல csk அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே… பள்ளித் தோழி தான் மனைவியா?… வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்…

By Begam on ஆனி 13, 2023

Spread the love

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கியவர் துஷார் தேஷ் பாண்டே. இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கேவிற்காக இந்த சிசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிரடியாக பந்து வீச்சில் ஈடுபட்டுவரும் இவரை சில நேரங்களில் ரசிகர்கள் விமர்சித்து வந்தாலும் ஐபிஎல் கோப்பையை வெல்லுவதற்கு இவரும் முக்கிய காரணமாக இருந்தார்.

   

இந்நிலையில் துஷார் தேஷ் பாண்டே தனது பள்ளி தோழியான நாபா கடம்வார் என்பவரை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள துஷார், எனது பள்ளி பருவ கிரஷ் மணப்பெண்ணாக உயர்வு பெற்றிருக்கிறார் என்று பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

   

 

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டி முடிந்தவுடனே பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

அவரை தொடர்ந்து தற்பொழுது  மற்றொரு வீரரான துஷார் தேஷ்பாண்டே தனது பள்ளிப்பருவ தோழியான நாபா கடம்வாரை நிச்சயதார்த்தம் செய்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.