“கழுத்தில் காயம்… டிரைவருடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி”… பிரபல சென்னை டாக்டர் மரணத்தில் அம்பலமான பகீர் உண்மை…!

Spread the love

சென்னையில் புகழ்பெற்ற இதயநோய் நிபுணராக வலம் வந்த மருத்துவர் உல்லாஸ் (60) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ உலகிலும் சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வசித்து வந்த இவர், முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) மருத்துவமனையில் இதய மின் உடலியல் மற்றும் இதயத் துடிப்பு சீரமைப்பு துறையின் தலைவராகப் பணியாற்றி வந்தார். நீண்ட மருத்துவ அனுபவமும் மதிப்பும் மிக்க ஒரு மருத்துவர், திடீரென தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு சக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே கடும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவால் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த டாக்டர் உல்லாஸ், நேற்று தனது படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். வீட்டில் இருந்த பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அவரது மனைவி மோனா, கணவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிசெய்தனர். ஆரம்பத்தில் இது மாரடைப்பால் ஏற்பட்ட மரணம் என்று கூறப்பட்டாலும், உல்லாஸின் கழுத்தில் இருந்த காயங்கள் சக மருத்துவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதால் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின. பயத்தின் காரணமாக, தங்கள் குடும்ப கார் ஓட்டுநர் சதீஷின் உதவியோடு கணவரின் தூக்கிட்டு தற்கொலையை மாரடைப்பு என்று கூறி மறைக்க முயன்றதாக மனைவி மோனா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். மாரடைப்பு நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து, இந்த தற்கொலைக்கான அசல் காரணத்தைக் கண்டறிய வளசரவாக்கம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையின் அடுத்தகட்டமாக, கடந்த 2024 அக்டோபர் மாதம் டாக்டர் உல்லாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் பணிபுரிந்த மருத்துவமனையின் பெண் தொழில்நுட்பப் பணியாளர் கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் மகளிர் போலீசாரால் திருப்பதியில் வைத்து உல்லாஸ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். சென்னை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலும், சமூக அந்தஸ்துக்கு ஏற்பட்ட களங்கமுமே அவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

5 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

8 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

9 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

24 minutes ago

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

30 minutes ago

‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…

31 minutes ago