இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவால் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்றிருக்கிறார் . 2023 ஆம் வருடம் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கிடையில் 2018 ஆம் வருடம் இவருக்கும், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப்க்கும் திருமணம் நடந்தது . இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில் 7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும் தன்னுடைய கணவர் காஷ்யப்பை பிரிவதகவும் சாய்னா நோவல் அறிவித்தார்.
இந்த நிலையில் கணவரை விட்டு பிரிவதாக அறிவித்திருந்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவல் தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளார். கணவரோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர் “சில நேரங்களில் நம்மோடு இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும் போது தான் தெரிகிறது. மீண்டும் தங்கள் உறவை நாங்கள் கட்டமைக்க முயற்சிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
