செருப்பால அடிக்கணும்.. பள்ளி மாணவர்களை தாக்கிய பிரபல நடிகை கைது.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on நவம்பர் 4, 2023

Spread the love

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருந்து நேற்று 88K மாநகர பேருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்ற போது அதில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்து மேற்கூரை மீது ஏறி கூச்சலிட்டபடியும் பயணம் செய்தனர்.

   

இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த பா.ஜ.க பெண் நிர்வாகி தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருந்தார். பேருந்து நின்றவுடன் அவர் கீழே இறங்கி பேருந்தின் முன் மற்றும் பின் பக்க படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பள்ளி கல்லூரி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும், கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார்.

   

 

மேலும் அவர் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர் மற்றும் சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் மீது போலீசார் நாச்சியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்தனர்.