வழக்கமாக நடிகர் அஜீத்குமார், சினிமா சார்ந்த சக நடிகர்கள் நடிகைகள் மற்றும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் அதிகம் நட்பு பாராட்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாருடனும் அவ்வளவு எளிதாக நெருக்கமாக பழகும் தன்மை அஜீத்குமாருக்கு கிடையாது. ஆரம்பத்திலிருந்து அதை அவர் பின்பற்றி வருகிறார். ஆனால் சமீப காலமாக துபாயில் நடிகர் அஜீத்தை சந்திக்க செல்லும் திரை பிரபலங்கள் அதிகரித்து விட்டனர். நடிகர்கள் சிலம்பரசன் சிபிராஜ் நடிகை நயன்தாரா அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என பலரும் துபாய்க்கு சென்று நடிகர் அஜீத்குமாரை சந்திப்பது வழக்கமாக நடந்து வருகிறது.
ஆனால் அவர்கள் யாருமே தாமாக துபாய்க்கு செல்லவில்லை. மாறாக அவர்கள் திட்டமிட்டு துபாய்க்கு வரவழைக்கப்படுகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அஜீத்தின் கார் பந்தயத்திற்கு நிதி உதவி செய்யும் குளிர்பான நிறுவனம், கூட்டத்தை கூட்டினால் தான் விளம்பரம் கிடைக்கும் என்ற நிபந்தனையை விதித்துள்ளதால் ஸ்பான்சர்களின் விருப்பத்திற்காகவே நடிகர் அஜீத்குமார் தரப்பு, சக நடிகர் நடிகைகளை துபாய்க்கு வரவழைப்பதாக பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.
