அட கடவுளே… மரண பயத்தை காட்டிய வெள்ளம்… 1 மாதக் குழந்தையுடன் சிக்கிய குடும்பம்… மீட்டெடுத்த தீயணைப்புத் துறை மீட்புக்குழு… திக் திக் நிமிடங்கள்…!!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜள்காவ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமள்னேர் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இந்த வெள்ளப் பெருக்கின் போது, அமள்னேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அங்கு வசித்து வந்த ஒரு பெண், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வெறும் ஒரு மாதமே ஆன கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

   

தகவல் அறிந்ததும், உள்ளூர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெள்ளத்தின் சுழலையும் பொருட்படுத்தாமல், ஒரு மாதக் குழந்தையையும் மற்ற குழந்தைகளையும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.