“நான் வாழ்ந்தால் இவர் கூட தான் வாழ்வேன்”… 10 வருட உயிருக்கு உயிரான காதல்… வாலிபரை கொடூரமாகக் கொன்ற பெண்ணின் பெற்றோர்… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி…!

Spread the love

மயிலாடுதுறை அருகே அரியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த வைரமுத்து (28) என்பவர் மெக்கானிக் வேலை பார்த்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் இவரும் கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் சென்னையில் தங்கிய பணியாற்றி வரும் நிலையில் அவருடைய தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளார்.

தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த குடும்பத்தினர் தங்களுடைய மகளை நிராகரிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைரமுத்துவின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கும் வைரமுத்துவுக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் சமாதானமான அந்த பெண் மீண்டும் வேலைக்காக சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வைரமுத்து மயிலாடுதுறையில் வேலை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது அடியமங்கலம் பிள்ளையார் கோவில் அருகே வைரமுத்துவை வழிமறித்த மர்மகும்பல் அவரை ஓட ஓட சரமாரியாக வெட்டிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தங்கள் மகன் கொலைக்கி அவரது காதலியின் குடும்பத்தினரை காரணம் என வைரமுத்துவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் குஷி.. மேட்ச் டிக்கெட் இருந்தா மெட்ரோவில்… பயணம் முற்றிலும் இலவசம்.. சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…

2 minutes ago

“298 பேஷண்ட்.. 250 குழந்தைகள்”… 46 வயது குழந்தை நல மருத்துவர் செய்த அந்த காரியம்… உலகையே உலுக்கிய ‘ஜோயல் லெ ஸ்கோவர்னெக்’ பாணி கொடூரம்…!

ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மருத்துவத் துறையில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில்…

3 minutes ago

சமைக்கும் முன் சிக்கனை கழுவுகிறீர்களா?… உங்கள் குடும்பத்திற்கே ஆபத்து… CDC எச்சரிக்கை..!!

சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…

4 minutes ago

ரூ.1805 பில் இனி வெறும் ரூ.1570 தான்… முதலமைச்சர் விஜய்யின் புதிய திட்டத்தால் யாருக்கெல்லாம் லாபம்?… இதோ புதிய லிஸ்ட்…!

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…

7 minutes ago

தனியார் நிறுவனங்களுக்கு செக் வைத்த BSNL..! வெறும் கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா.. உடனே ரீசார்ஜ் பண்ணுங்க வாடிக்கையாளர்களே …!!

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…

7 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு… பதறியடித்த போயஸ் கார்டன் ஜோதிடர்… த.வெ.க வட்டாரத்தில் கசிந்த தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…

11 minutes ago