அகமதாபாத்தில் நேற்று 1:37 மணியளவில் டேக் ஆப் செய்யப்பட்ட சில வினா நிமிடங்களிலேயே விமானம் விழுந்து நொறுங்கி சம்பவம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் பயணிகளோடு சேர்ந்து விமான ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான இந்த விமானத்தை இயக்கிய கேப்டன் சுமித் சபர்வால் மற்றும் க்ளைவ் குந்தர் இருவருமே நன்கு அனுபவம் கொண்டவர்கள். விமான பணிப்பெண்களாக ரோஷினி, காத்ஹ்தோய் ஷர்மா, மிதாலி உள்ளிட்டோர் இருந்திருக்கின்றனர். இதில், ரோஷினி ராஜேந்திர சோங்காரே விமான பணிண்பெண்ணாக மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் விமானத்தில் எங்கெல்லாம் பயணம் செய்கிறாரோ அதை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அந்த பகுதியில் தற்போது உயிரிழந்த ரோஷினி தன்னுடைய சக விமான பணிப்பெண்களோடு ரீல்ஸ் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டு இருக்கிறார். மணிப்பூரில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து இளம் விமான பணிப்பெண்கள் ஒருவராக பணிபுரிந்து வந்துள்ளார். 21 வயதாகும் இவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து தன்னுடைய விமானம் லண்டனுக்கு செல்ல இருப்பதாகவும் சில நாட்களுக்கு தன்னால் போன் செய்ய முடியாது என்றும் ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் ஃபோன் செய்வதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இதுதான் அவருடைய கடைசி போனாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது என்று அவருடைய குடும்பத்தினர் கண்ணீரோடு கூறியுள்ளார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…