காதலிச்சது குத்தமா…? “மரத்தில் கட்டி செருப்பு மாலை போட்டு…” ஊர் முன்னே அவமானப்படுத்திய குடும்பத்தினர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 26, 2026

Spread the love

காதலிப்பது என்பது மிகப்பெரிய குற்றமா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே பொதுவெளியில் அவமானப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கௌரவத்தை வீதியில் போட்டு மிதிப்பதன் மூலம் இவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்ற ஆதங்கம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயத்தை, பேசித் தீர்த்திருக்க வேண்டிய குடும்பத்தினர், அதனைப் பெரிதுபடுத்தி வீடியோவாக வெளியிட்டதால் தற்போது லட்சக்கணக்கானோர் பார்க்கும் கேலிக்கூத்தாக அது மாறியுள்ளது.

கௌரவம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சிதைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகத்தின் முன்னே தனது மகளின் மானத்தை அந்தப் பெற்றோர் தாங்களாகவே ஏலம் போட்டிருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதன் மூலம் அந்தப் பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. கௌரவத்தைக் காப்பதாக நினைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தையும் மரியாதையையும் அவர்களது குடும்பமே சீரழித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.