குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள உமாநாத் சாலையில் குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினர் நடுரோட்டில் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாளவியா நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இந்தப் பகுதியில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிச் சண்டையிட்டுள்ளனர்.
இந்தச் சண்டையை விலக்கி விடுவதற்கு அருகில் நின்றவர்கள் யாரும் முன்வரவில்லை மாறாக, பலர் தங்களது செல்போன்களில் இந்த மோதலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அலட்சியப் போக்கு குறித்தும், குடும்பச் சண்டைகளை நடுரோட்டில் நடத்தும் இத்தகைய செயல்கள் குறித்தும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
