‘Family First’… வெளிநாட்டில் ஜாலியாக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகர் ஆர் ஜே பாலாஜி… அவரே வெளியிட்ட அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

By Begam on தை 15, 2023

Spread the love

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது குடும்பத்தோடு இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ரேடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே பாலாஜி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். யோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கினார். இவர் ஆர்.ஜே வாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்று ஆர்.ஜே பாலாஜி இப்பொழுது கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

   

   

இவர் தமிழில் ‘எல் கே ஜி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகராக இவர் நடித்தது மட்டுமின்றி இப்படத்தை தானே இயக்கியுள்ளார்.

 

இவர் இறுதியாக ஹிந்தி படமான ‘பதாய் ஹோ’ என்ற திரைப்படத்தை தமிழில் ‘வீட்ல  விசேஷங்க’ என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், குடும்ப புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள இவர் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.