வாகன ஓட்டிகளே உஷார்…! அபராதம் என்ற பெயரில் வரும் போலி லிங்க்…. கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி…!!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வாகன ஓட்டிகளின் செல்பேசிக்கு வரும் போலியான குறுஞ்செய்திகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு இணையதளமான ‘பரிவாஹன்’ போன்றே தோற்றமளிக்கும் போலி லிங்குகளைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கித் தகவல்களைத் திருடும் புதிய மோசடி தற்போது பரவி வருகிறது. மர்ம நபர்கள் அனுப்பும் அந்த லிங்குகளைக் கிளிக் செய்தால், வங்கி கணக்கு எண் மற்றும் ரகசியக் குறியீடுகளைத் திருடிப் பணத்தை அபகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, செல்பேசிக்கு வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்திற்குச் சென்று சரிபார்க்க வேண்டும். அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் மிரட்டல் தொனியிலான செய்திகளை நம்பி பணத்தைச் செலுத்த வேண்டாம். இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க, சந்தேகத்திற்கிடமான எண்களை உடனே பிளாக் செய்வதுடன், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிப்பது பாதுகாப்பானது.