“வியூஸ்களுக்காக பிணத்தை தின்று…” முதலில் ஆண்… அப்புறம் திருநங்கை…! திருமணத்திற்கு பிறகு மாறிய வாழ்க்கை…. போலி அகோரியின் திடுக்கிடும் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் எரியும் பிணக் காட்டில் இருந்து மனிதச் சதையை எடுத்து உண்ட “காளி” என்ற நந்த கிரி அகோரியின் அதிர்ச்சி தரும் பின்னணி விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வியூஸ்கள் மற்றும் லைக்குகளைப் பெறுவதற்காகச் சுடுகாட்டில் எரியும் பிணத்தின் சதையைத் தின்று அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை அதிரடியாகக் கைது செய்த உஜ்ஜைனி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகின. உண்மையில் இந்த நபர் அள்ளூரி ஸ்ரீனிவாஸ் என்ற ஆண் என்பதும், திருமணத்திற்குப் பிறகு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ‘நந்த கிரி’ என்ற திருநங்கையாக மாறியதும் தெரியவந்தது.

   

மேலும் தந்திரப் பூஜைகள் செய்வதாகக் கூறி பெண் ஒருவரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்து சொகுசுக் கார் வாங்கிச் சமூக வலைத்தளங்களில் பந்தா காட்டி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அகோரி போல வேடமிட்டுப் பிணத்தைத் தின்று வீடியோ போட்டது அம்பலமாகியுள்ளது. கைதான அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.