சென்னையைச் சேர்ந்த 53 வயது ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவருக்குத் தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறிச் சிறப்புச் செயலி மூலம் இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதை நம்பி அவர் கொடுத்த முகவரிக்குச் சென்ற தொழிலதிபரை, அந்த இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். அதன்பின்னர், கூகுள் பே வாயிலாக ₹15,000 மற்றும் ஏடிஎம் கார்டு மூலமாக ₹20,000 என மொத்தம் ₹35,000 பணத்தைப் பறித்துக்கொண்டு, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகப் மிரட்டித் தப்பியோடிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட கணக்கை ஆய்வு செய்து தி.நகரைச் சேர்ந்த சுதாகர், சதீஷ் மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த விக்னேஷ்வர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மெக்கானிக் மற்றும் பைக் ஷோரூம் ஊழியர்களான அவர்களிடம் இருந்து ₹21,000 பணம், கத்தி மற்றும் செல்போனைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சென்னை தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…