BREAKING: ஒரே நாளில் 100+ ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்! சி.வி. சண்முகத்திற்கு எடப்பாடியின் படு பயங்கர ஷாக்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மயிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைக் கழகம் அளவிலான முக்கிய நிர்வாகிகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, சி.வி. சண்முகத்தின் கருத்தைக் கேட்கத் தலைமை தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை போலப் பேசி இருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த நீக்க உத்தரவு வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.