யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட்ட மாணவி பலி…! மதுரையில் நடந்த கொடூரம்… நிபுணர்கள் கடும் எச்சரிக்கை…!!

Spread the love

மதுரை செல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி, உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ‘வெங்காரக் கல்’ என்ற பொருளை வாங்கிச் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயது முதலே உடல் பருமனாக இருந்த அவர், இணையதளத்தில் வந்த தவறான ஆலோசனையைப் பின்பற்றி நாட்டு மருந்துக் கடையில் வாங்கி உட்கொண்ட சில மணி நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் விற்பனை செய்த கடை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முகவரி இல்லாத விளம்பரங்களையும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் மருத்துவக் குறிப்புகளையும் பொதுமக்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி எண்கள் மூலம் பரப்பப்படும் இதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாகவும், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவர்களை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் ஆபத்தான மருத்துவப் பரிசோதனைகளைச் சொந்தமாக மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago