மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… தமிழக பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. அறிவித்தார் அமைச்சர்….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தனது துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தமிழக மகளிரின் ஒட்டுமொத்த நலன் மற்றும் தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்தும் நோக்கில், மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்த முக்கிய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிட உள்ளதாகவும் தற்பொழுது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.