இனி யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்?… அடுத்த 3 மாதங்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்… CM விஜய்யின் ரகசிய ப்ளான் அம்பலம்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கம் குறித்த அறிவிப்பை மிக விரைவில் வெளியிடுவதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் தகுதியான புதிய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறும் பணிகளை முடித்து, இத்திட்டத்தை விரிவுபடுத்த அவர் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த மக்கள் நலத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி முடிக்க முதல்வர் நினைப்பதே இதற்குக் காரணம். முன்னதாக, கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு, அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி தகுதியுடைய அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்காததும் ஒரு முக்கிய காரணம் என்று அக்கட்சியின் ஆய்வுக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பின்னணியில், முதல்வர் விஜய்யின் இந்த தற்போதைய அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.