மைனா, தலைவா போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தற்போது வரை பிரபல ஹீரோயினாக தக்க வைத்து கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு மலையாள நீலதாமரா என்ற படத்தில் நடித்த திரை உலகிற்கு முதல் முதலாக அறிமுகமானார்.
வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் வைத்துக்கொண்டார். அதன் பின்னதாக 2010 ஆண்டு மைனா படம் மூலமாக திரையுலகில் மாபெரும் நடிப்பை வெளிக் கொண்டு வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதன் பின்னதாக இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உண்டானதால், பல பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது. வேட்டை, ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற மாபெரும் படங்களை நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
அதன் பின்னதாக விஜயுடன் நடித்து வெளிவந்த தலைவா படம் மூலமாக இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், சிறிது பிளவு ஏற்பட கருத்து வேறுபாடினால் இருவரும் பிரிந்து தற்போது விவாகரத்து வாங்கி உள்ளார்கள். அதன் பின் ஆடை, தி டீச்சர், கிறிஸ்டோபர் போன்ற ஹீரோயினை மையமாக வைத்த படங்களில் நடித்து சினிமாவில் மீண்டும் பிரதிபலிக்க ஆரம்பித்தார். தற்போது சில நாட்களுக்கு முன்பாக “ஜகட் டெசை” என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்த வந்த நிலையில், தற்போது நடித்து வெளியாகியுள்ள GOAT life என்ற படத்தின் ப்ரோமோஷன் காக தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் இருந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் தனது தொழில் மேல் இருக்கும் பக்தியால் மாசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று இவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு இப்படத்திற்காக பல பிரமோஷன் செய்து வருகிறார். இதற்காக பல ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவுகளை அள்ளித் தருகிறார்கள்.
View this post on Instagram