இவ்வளவு வயதிலும் நடிகை நதியாவின் அழகும் பிட்னஸ்சும் இன்னும் குறையவே இல்லை… என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க நீங்களே பாருங்க… வைரலாகும் வீடியோ இதோ…

By Begam on புரட்டாதி 30, 2022

Spread the love

நடிகை நதியா’ பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  மேலும் இவர் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் முதன் முதலாக நடித்த தமிழ் நடிகை இவர்தான்.

   

பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, தாமிரபரணி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில்  தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

 

இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா கொலுசு என பிரபலமாக விளங்கினார்.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை நதியா தற்பொழுது பரதநாட்டியம் ஆடும் வீடியோ ஒன்றினை தன் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘எவ்வளவு வயசானாலும் உங்க அழகும் பிட்னசும் இன்னும் உங்களை விட்டுப் போகவே இல்லை’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)