பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பல தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் பல பிரபலங்கள் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.

இத்தொடரானது பெண் உரிமை, பெண் கல்வி,ஆண் ஆதிக்கம் மற்றும் அப்பா மகள்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டம் என பலவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் அடுத்தடுத்த திருப்பங்களை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் திருச்செல்வம் கூறிகயில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த பெரிய ரீ ச்சை இது மிக விரைவிலேயே கொடுத்துவிட்டது என கூறியுள்ளார். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. இவருக்கு இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர் என்று கூறலாம்.

இவர் பல தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் இவருக்கு தைரியமான கதாபாத்திரம் என்பதால் ரசிகர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்நேரத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது அதாவது இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வளம் வர அதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சியாகி உள்ளனர்.
