சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on மே 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மதுமிதா.

   

பெங்களூர் பூர்வீகமாக கொண்ட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த சீரியலில் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

   

 

சீரியலில் எப்போதும் புடவையில் வலம் வரும் ஜனனி நிஜத்தில் மாடன் உடையில் தான் இருப்பார். instagram பக்கத்தில் எப்போதும் மாடலான உடையில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழில் எதிர்நீச்சல் சீரியல்தான் இவருக்கு முதல் சீரியல் ஆனால் தெலுங்கில் ஏற்கனவே சூப்பர் ஹிட் கொடுத்த சின்னத்திரை சீரியலில் நடித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் மதுமிதா youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இவர் தற்போது மாலத்தீவுக்கு சம்மர் வெகேஷனுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மாடன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.