சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் சிறிது காலத்திலேயே மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் மாரிமுத்து சமீபத்தில் காலமானார்.

அவரது கதாபாத்திரம் இல்லாமலேயே இவ்வளவு நாள் கதை நகர்ந்து சென்றது. இதனால் கதிரும், ஞானமும் இணைந்து அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர். இன்றைய எதிர்நீச்சல் புரோமோவில் போலீசார் ஞானம் மற்றும் கதிரிடம் குணசேகரன் இருக்கும் இடத்திற்கு அழைத்து போகச் சொல்லி வற்புறுத்தி கூட்டி செல்கின்றனர்.

அங்கு கதிரும், ஞானமும் நடந்தவற்றை கூறிய பிறகும் போலீசார் நீங்க எங்களை ஏமாற்றுகிறீர்களா என கூறி இருவரையும் அடிக்கின்றனர். அப்போது கெத்தாக காரில் வந்து குணசேகரன் என்ட்ரி கொடுக்கிறார். இதனை பார்த்ததும் கதிர் சந்தோஷத்தில் ஓடி வருவது போல புரோமோ அமைந்துள்ளது.
