ஒட்டுமொத்த சீரியலையும் அடிச்சு தூக்கிய சன் டிவியின் பிரபல சீரியல்.. ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் 7 விருதுகள்..!

By Mahalakshmi on ஆடி 16, 2024

Spread the love

எதிர்நீச்சல் சீரியல் விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 7 விருதுகளை வாங்கி இருக்கின்றது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. சீரியலுக்கு என பெயர் போன சேனல் சன் டிவி. இந்த சேனலில் மிகவும் பாப்புலராக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

   

   

அந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து உயிரிழந்ததற்கு பிறகு சீரியலின் தாக்கம் மக்களிடையே குறை தொடங்கியது. இதனால் வேறு வழி இல்லாமல் இந்த சீரியலை முடித்து விட்டார் இயக்குனர் திருச்செல்வம். இளம் தலைமுறையினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியலாக இது இருந்தது.

 

சன் டிவியில் ஒரு நாளைக்கு 15க்கு மேல் சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் சில சீரியல்கள் மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை வகிக்கிறது. அப்படி இந்த சீரியல் ஒளிபரப்பாகிய சிலர் நாட்களிலேயே டிஆர்பி-யில் அதிக ரேட்டிங்கை பிடித்துவிட்டது. இப்படி டிஆர்பி யில் அதிக ரேட்டிங் இருக்கும் சீரியல்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை ஆனந்த விகடன் வழங்கி இருக்கின்றது.

அதன்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் மொத்தம் ஏழு விருதுகளை தட்டி தூக்கியிருக்கின்றது. எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஈஸ்வரி பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் என்ற விருதை பெற்றிருக்கின்றார். மேலும் நந்தினி சிறந்த நகைச்சுவை நடிகை என்ற விருதையும்,சந்தானம் சிறந்த ஒளிப்பதிவாளருகான விருதையும், சிறந்த சீரியல் சிறந்த இயக்குனர் என்ற விருதை திருச்செல்வமும் வாங்கி இருக்கின்றார்.

#image_title

 

மேலும் சிறந்த நகைச்சுவை நடிகர் என கரிகாலன் பெற்றிருக்கின்றார். இதைத்தொடர்ந்து மாரிமுத்து என்கின்ற குணசேகரன் டாக் ஆப் தி இயர் என்ற விருதை பெற்றிருக்கின்றார். அனைவருக்கும் ஃபேவரிட் ஆக இருந்து எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நிலையில் அடுத்த ஒரு நல்ல கதையுடன் திருச்செல்வம் மீண்டும் ஒரு சீரியலை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.