“ஆண்டனி பாக்கியராஜ்” அவர்களின் இயக்கத்தில் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபாகங்கள் நடித்து வெளியாகி வெற்றியை கண்ட படம் தான் “சைரன்” இப்படத்தில் ஜெயம் ரவி அவர்களுக்கு பெருமளவில் பெயரும் புகழும் கிடைத்தது, தற்போது இப்படம் முடித்த பின் இவர் “ராஜேஷ்” அவர்களின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இப்ப படம் காஷ்மீரில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
வேலாயுதம், தனி ஒருவன், தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களை எடுத்து பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் “மோகன் ராஜா”. தற்போது மோகன் ராஜா அவர்கள் சில நாட்களுக்கு முன்னால் “தனி ஒருவன்” பாகம் இரண்டு எடுக்கப் போவதாக சில கிளிப்பிங்ஸ் வீடியோசை வெளியிட்டு இருந்தார், தற்போது வெளியாகி இருக்க தகவல் என்னவென்றால், தனி ஒருவன் படப்பிடிப்பின் பூஜை நேற்று நடந்து முடிந்து விட்டதாம்,

டி நகரில் உள்ள செவிலியர் சிவாஜி கணேசன் ரோட்டில் உள்ள ஸ்டுடியோவில் நேற்று தனி ஒருவன் படத்தின் பாகம் இரண்டிற்கான பூஜை நடத்தி வெளியிட்டு இருக்கிறார்கள், ஆனால் இப்படத்தில் பூஜையில் ஜெயம் ரவி அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை, அவர் காஷ்மீரில் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் பிஸியாக இருப்பதால் தற்போது இங்கு நடக்கும் பூஜைக்கு அவரால் வர முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது,
அதனால் இப்படத்தின் பூஜையை மோகன் ராஜா அவர்களே ஆரம்பித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திற்கு பின் தொடங்கும் என்று கூறி உள்ளார்கள். தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் “கோட்” பட தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் கோட் படத்தின் தயாரிப்பு முடிந்து வெளியான பிறகு ஏப்ரல் மாதத்துக்கு பின்பாக தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
