Connect with us

காதலர் தினத்தன்று திருமண செய்தியை அறிவித்த எரும சாணி விஜய்… பொண்ணு யாரு தெரியுமா?… வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ…

CINEMA

காதலர் தினத்தன்று திருமண செய்தியை அறிவித்த எரும சாணி விஜய்… பொண்ணு யாரு தெரியுமா?… வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ…

 

யூடியூப் சேனல் மூலம் மிகப் பிரபலமானவர் எரும சாணி விஜய். இதில் அவர் வெளியிடக்கூடிய வீடியோவை பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதில் பெரும்பாலும் காதலன், காதலிக்கு இடையில் நடக்க கூடிய விஷயங்கள் மற்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் காமெடி தான் அதிக அளவில் இருக்கும்.

   

டிக் டாக் செயலி முடக்கிய பிறகு அனைவருக்கும் கைகொடுத்தது யூடியூப் தான் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹரிஜா என்பவருடன் இணைந்து எருமசாணி விஜய் எந்த யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

முக்கியமான காமெடி வீடியோக்களை எடுத்து இதில் பதிவேற்றி அதிக அளவு பணமும் சம்பாதித்து வருகிறார். எரும சாணி விஜய் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்த கலக்கி வருகிறார்.

இவர் ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து நடிகர் அருள்நிதியை வைத்து ‘டி பிளாக் ‘ படத்தை இயக்கி வெற்றிகரமாக இயக்குனராகவும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிக்கிறாரா அல்லது ஏதாவது ஒரு படத்தை இயக்குகிறாரா என்பது நமக்கு தெரியவில்லை. இந்நிலையில் எரும சாணி விஜய் தனது 6 வருட காதலியான நக்ஷத்திராவை திருமணம் செய்ய உள்ளார்.

அந்த வகையில் காதலர் தினமான இன்று அவர் தனது திருமண செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் .இதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அவரின் வைரல் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Nakshatra Murthy (@nakshatra.murthy)

Continue Reading
To Top