Categories: சினிமா

இது சினிமாவுக்கு பண்ற துரோகம்.. நாங்க அழிஞ்சதுக்கு காரணமே அதுதான்.. மனம் திறந்த youtube பிரபலம் எரும சாணி விஜய்..!

Spread the love

சமூக வலைத்தளம் மூலம் பல்வேறு நபர்கள் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். அதன்படி இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட இளம் தலைமுறை அதிகம் கவர்ந்தது டிக் டாக் செயலி தான். பலரும் தங்களுடைய நடிப்பு மற்றும் நடன திறமைகளை இந்த செயலி மூலம் தான் வெளிப்படுத்தினர். இதன் மூலமாக பலரும் பிரபலமாகிய சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளனர். இந்த செயலி ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டதால் அதன் பிறகு பலரும் youtube சேனல்களை ஆரம்பித்து விட்டனர். யூடியூப் சேனல் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே வருமானம் பார்க்கிறார்கள்.

தினம்தோறும் புதுவிதமான வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி youtube சேனலை சரியாக பயன்படுத்தி பிரபலம் அடைந்தவர் தான் எரும சாணி விஜய். இவர் ஹரிஜா என்பவர் உடன் சேர்ந்துதான் youtube சேனலை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் செய்யும் காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் காதலன் காதலி இடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், கணவன் மற்றும் மனைவி இடையில் நடக்கும் காமெடிகள் போன்ற வீடியோக்கள் எல்லாம் படு வைரலானது.

இதனால் எரும சாணி விஜய் குறுகிய காலத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமானார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஹரிஜா மற்றும் விஜய் இருவரும் பிரிந்து தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். அதன்படி நடிகர் அருள்நிதியை வைத்து டி ப்ளாக் என்ற படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இப்படி சினிமாவிலும் பிசியாக இருந்த எரும சாணி விஜய் சமீப காலமாகவே காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நாங்க யூடியூப் சேனல் தொடங்கும் போது கொஞ்சம் பேர்தான் இருந்தாங்க.

அப்போ யூட்யூபில் வீடியோ போடுவது தான் சினிமாவுக்கு பேசிக் என நினைத்து தான் உள்ளே நுழைந்தோம். இங்க வெப் சீரிஸ் மற்றும் ஷார்ட்ஸ் போடும்போது அதையேதான் சினிமாவில் பெருசா பண்ண போறோம் ஒரு இயக்குனராக வேண்டும் அல்லது ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் யூடியூபில் நுழைந்து நாங்களும் பல வீடியோக்களை போட்டோம். ஒரு கட்டத்தில் நீங்க ஏன் இப்படி போறீங்க பிளாக் பண்ணுங்க நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அப்போ கேமராமான கொண்டுவந்து நிப்பாட்டி இப்படி எல்லாம் எடு கேமராவை திருப்பு இந்த ஸ்கிரீன் குள்ள எங்களை கொண்டு வான்னு சொல்லும்போது அண்ணா எப்படி நான் இதை வச்சுக்கிட்டு இப்படி பண்ண முடியும்னு கேமரா மேன் கதறுவாரு.

அப்போ அது எங்களுக்கு சினிமாவுக்கு பண்ற துரோகம்னு தோணுச்சு. இப்ப யூடியூப்ல நிறைய பேர் வந்துட்டாங்க. புதுசு புதுசா வீடியோ போடறாங்க. நாங்க இருக்கப்ப நீங்க பண்ற வீடியோ நல்லா இருக்கு இது நல்லா இருக்கு தல அப்படின்னு பாராட்டி தான் வீடியோ போட்டோம். ஆனா இப்ப இருக்கிறவங்க என்ன பண்றாங்கன்னா நீ போனாலும் உன்னை விடமாட்டேன்னு இழுத்து போட்டு நம்பள வச்சு கன்டென்ட் ரெடி பண்றாங்க. ஒருத்தருக்குள்ள ஒருத்தங்க அடிச்சுகிட்டு தான் வியூஸ்காக இப்படி பண்றாங்க. இன்னொருத்தங்களை வைத்து கன்டென்ட் பண்ணா தான் அவங்களுக்கு வியூஸ் கிடைக்கும். அந்த அளவுக்கு யூடியூப் இப்ப மாறி போச்சு. இப்படி எல்லாரும் பண்றதுனால தான் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருச்சு என்று எரும சாணி விஜய் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

31 minutes ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

31 minutes ago

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

36 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

41 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

51 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

58 minutes ago