தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவின் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்க வீடியோ ஒன்று பொதுமக்களின் பார்வைக்குத் திரையிடப்பட்டது.அந்த ஏ.ஐ. வீடியோவில் ஏராளமான தமிழ் எழுத்துப் பிழைகள் மற்றும் வார்த்தைக் குளறுபடிகள் இடம்பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில், அரசுத் துறையின் அலட்சியம் காரணமாக ஒரு சில நிமிட வீடியோவைக் கூடச் சரியான தமிழில் தயாரிக்காமல் வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் மிக முக்கியமான அரசு நிகழ்ச்சியில், தாய்மொழியான தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்
