BREAKING: தலைநகரமே பரபரப்பில்… சற்றுமுன் மீண்டும் கைது… தூய்மை பணியாளர்களைத் தொடர்ந்து ஆசிரியர்களும் கைதானதால் பதற்றம்…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பணி மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதனிடையே திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் நேற்று  குண்டுகட்டாக கைது செய்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று எழும்பூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமைச் செயலகத்தை நோக்கி சென்ற தூய்மை பணியாளர்கள் கைதான சற்று நேரத்தில் ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதால் தலைநகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.