“2017-க்கு அப்புறம் எல்லாமே போச்சு… சீக்கிரமே எடப்பாடி தனிமரம் ஆவாரு”…. சாபம் விட்ட EX அமைச்சர் செம்மலை…. பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 1, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த அவர், “அதிமுக தற்போது வற்றிய குளமாகிவிட்டது; 2017-க்குப் பிறகு கட்சிக்கு சரியான தலைமை அமையாததாலேயே விலகும் முடிவை எடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும், விரைவில் அவர் தனிமரமாகி விடுவார் என்றும் சாடியுள்ளார். கடந்த 3 மாதங்களாக வெளிநாட்டில் இருந்ததால் தவெகவில் இணைவதில் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட செம்மலை, தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தலைவராக விஜய் திகழ்வதாகவும், அதனால் அவருடைய தொலைநோக்குப் பார்வையை ஏற்று தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் தனது முடிவிற்கான காரணத்தை விவரித்துள்ளார்.