அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார். பொது வெளியிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சண்முகம், முடிந்தால் தன்னை கட்சியை விட்டு நீக்கிப் பார்க்குமாறு பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, உட்கட்சிக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்தச் சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமியின் நிலப்பாட்டிற்கு மாறாகச் சில முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை தலைமை பறித்தது. இருப்பினும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தங்களது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது அதிமுகவில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் ஆகியோர் அடங்கிய அதிருப்திப் பிரிவு இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் மற்ற தலைவர்கள் அமைதி காக்கும் வேளையில், சிவி சண்முகம் மட்டும் நேரடியாகவே பொதுக்குழுவைக் கூட்டுமாறும், தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் சவால் விட்டு வருகிறார். அவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கினால், அவர் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விடுவார் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, சிவி சண்முகத்தை நீக்குவதற்குப் பதிலாகத் தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்யலாமா அல்லது செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு முன் முடிவெடுக்கலாமா என்பது குறித்து மூத்த நிர்வாகிகளான அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எனினும், அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சில மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…