“எங்களுக்கு செஞ்ச துரோகம் சும்மா விடாது”…. தவெகவுக்கு ஆப்பு வைக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த பாய்ஸிங் முடிவுகள்… அரசியலை அதிரவைக்கும் ரிப்போர்ட்….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக களமிறங்கியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியிருந்தது. ஆனால், அங்கு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தற்போது அங்கு இடைத்தேர்தல் சூழல் உருவாகியுள்ளது.

துரோகம் செய்துவிட்டு மாற்றுக்கட்சிக்குச் சென்ற முன்னாள் நிர்வாகிகளுக்கும், புதிதாக உருவெடுத்துள்ள தவெகவுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக, இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள அவர், கூடுதல் நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணிகளை வேகப்படுத்தியுள்ளார். அதிமுக சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் திங்கள்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக சார்பில் மீண்டும் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமாவே வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

   

அதிமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட உள்வட்டாரக் கருத்துக்கணிப்புகளின்படி, தாராபுரம் தொகுதி கட்சிக்குச் சாதகமாக இருந்தாலும், மதுராந்தகம் தொகுதியின் வெற்றி வாய்ப்பு பாமகவின் ஆதரவைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் பாமக உடனான கூட்டணியை வலுப்படுத்தி, அன்புமணி ராமதாஸை நேரடியாகப் பிரச்சாரத்தில் களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், தவெகவின் சமூக வலைதளப் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் வகையில், டிஜிட்டல் தளங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

   

இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது வெறும் இரு தொகுதிகளுக்கான வெற்றி மட்டுமல்லாமல், வரும் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கியச் சோதனையாகப் பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் கட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், தொண்டர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். இதனால், இரு தொகுதிகளையும் எவ்வாறேனும் தங்களது வசம் தக்கவைத்துக்கொள்ள அதிமுகவினர் தற்போதே தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.